கடவுச்சொல்(password) 1
இது என்ன ஆன்மீகதொடரா?
கடவுச்சொல் 1
நீங்கள் எல்லாரும் உங்கள் செல்போனை பூட்டி வைத்திருப்பீர்கள்.அவைகளை திறக்க சரியான கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் சிலர் எண்களாக சிலர் கோடுகளாக சிலர் வார்த்தைகளாக இன்னும் சிலர் ஒலிகளாக வைத்திருப்பார்கள்
உதாரணமாக சிவாஜி படத்தில் ரஜினியின் லேப்டாப்பை
பலகுரளில் பேசி திறக்க முயற்சிப்பார்கள்
அப்படிதான்
கடவுச்சொல் என்பதும்
செல்வம் புகழ் ஆயுள் நிம்மதி மகிழ்ச்சி என அனைத்தும்
எல்லாருக்கும் கடவுள் கொடுத்திருக்கிறார்
ஆனாலும் பலருக்கு மகிழ்ச்சியின் பெட்டகம் திறக்காமலிருக்கும்
சிலருக்கு ஆயுள் பெட்டகம் திறக்காமலிருக்கும்
சிலருக்கு செல்வம் பெட்டகம் திறக்காமல் இருக்கும்
ஆம் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட வகைகள் தான்
திறந்து எடுத்து அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது
ஏனென்றால் நாம் எண்ணத்தினாலோ
அன்பினாலோ சொல்லினாலோ கடவுச்சொல்லை சரியாக போடவில்லை
ஆம் கடவு(ள்)சொல் என்பது
கடவுள் சொல்வது
கடவுள் என்பது என்னையோ என்னையோ இந்த உலகயோ கடந் து(சென்றுவிட்டார்)
ஆனாலும். உள் ளே இருக்கிறார்
சொல்லாக
கடவுச்சொல் தொடரும்