ஸ்ருதிஹாசனை கிளாமர் நாயகி என ரஜினி சொன்னது
ரஜினிகாந்த் கூலி ஆடியோ விழா உரை சர்ச்சை
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், படத்தில் நடித்த சிலரும், பாலிவுட் நடிகர்களும் குறித்து நகைச்சுவையாக குறிப்புகள் கூறினார்.
சோபின் ஷாஹீர் பற்றி – “முதலில் பார்த்தப்போ இவர் சரியா இருப்பாரா? முகம் திரும்புமா?” என்றார். ஸ்ருதி ஹாசன் குறித்து – “மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்” என்றார். இசையமைப்பாளர் அனிருத் பற்றி – “கச்சேரிக்கு மக்கள் இசை கேட்க அல்ல, அவரைப் பார்க்கவே வருகிறார்கள், இருட்டில்கூட அவரை பார்த்துவிடுவார்கள்” எனக் கூறினார். ஆமிர் கான் குறித்து – “பாலிவுட்டில் ஒரு பக்கம் சல்மான் கான், மறுபக்கம் ஷாருக் கான், நடுவில் ஆமிர் கான்… ஆனால் உயரம் குறைவானவர்” என்று குறிப்பிட்டார்.
இந்த உரை சிலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பலர் “தோற்றம், உடலமைப்பு குறித்து இப்படிப் பேசுவது சரியா?” என விமர்சித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினை நிலவுகிறது.
படம்: ரஜினிகாந்த் கூலி ஆடியோ விழாவில் உரையாற்றும் காட்சி.
|