🎁 எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்
,
ரூ. 949.53 கோடி செலவில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து,
ரூ. 182.06 கோடி மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
ரூ. 295.29 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு வழங்கினேன்.
🗿 அந்த மனநிறைவோடே, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் (PAP) தொடங்க முக்கியக் காரணமாக அமைந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய வி.கே. பழனிசாமி மற்றும் பெரியவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகளையும், இந்தத் திட்டப்பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களை நன்றியோடு நினைவுகூரும் நினைவு மண்டபத்தையும் பொள்ளாச்சியில் திறந்து வைத்தேன்.