ஸ்ரீ லீலாவின் புதிய படம்
டீச்சர்
கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீலீலா...வைரலாகும் ''மாஸ் ஜாதரா'' பட டீசர்
ரவி தேஜாவும் ஸ்ரீலீலாவும் ''மாஸ் ஜதாரா''வின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர தயாராகி வருகின்றனர். இப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், டீசர் தற்போது வெளியாகி வைரலாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதில் ரவி தேஜா ஒரு நேர்மையான ரெயில்வே போலீஸ் அதிகாரியாகவும் ஸ்ரீலீலா ஒரு அப்பாவியான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ரவி தேஜா நகைச்சுவை, காதல், ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். விரைவில் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பானு போகவரபு எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஜேந்திர பிரசாத் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இதைத் தயாரித்துள்ளனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.