தங்தமிழன்கவிதைகள்
![]() |
பால்யவயதுசிநேகிதருடன் |
சொந்தங்களிலே எத்தனேயோ
வகைகள் உண்டு
பணமில்லை என்றால் அவைகள் எல்லாம்
பகையாக வெடிக்கும் குண்டுகளே
சொந்தம் என்பது யாதெனில்
பொருளுக்குரிய விலையை கொடுத்துவிட்டு அவைகளை வாங்கிக் கொண்டால் அப்பொருள் ஆனது உங்களுக்கு சொந்தமாகிவிடும்
சொந்தக்காரர்களுக்கு நீங்கள் எப்படி சொந்தமானீர்கள்
அவர்கள் எப்படி உங்களுக்கு சொந்தமானார்கள்
சோதனைகள் வந்துவிட்டால் சொந்தமில்லை பந்தமில்லை
பணம் இருந்தால் தான் பந்த பாச சொந்தமெல்லாம்
அதுவும் பணத்துக்காக தான்
அது நிரந்தர சொந்தம் என்று சொல்ல முடியாது
உண்மையானசொந்தம்யாதெனில்
எதையும் எதிர்பார்க்காமல் அன்புடனே பாசத்துடனே பழகக்கூடிய ஒருவர் உங்களுக்கு கிடைக்கிறார் என்றால் அவர்தான் உங்களுக்கு உண்மையான சொந்தக்காரர்
அப்படிப்பட்ட உண்மையான அன்பு பாலிய வயதிலேயே அந்த சிறிய வயதிலேயே கள்ளம் கபடமற்ற
ஒருவருக்கொருவர் அன்பாய் ஆறுதலாய் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாய் வாழ்ந்த அந்த விடுதியின் வாழ்க்கை தான்
உலகவாழ்வில்
மாயையான மயக்கம் நிறைந்த இந்த உலகத்தில் அன்பு காட்டுவதற்கு தராதரம் பார்ப்பார்கள் சிலர்
அவர்கள் ஜாதிக்காரர்கள் இடத்திலே அவர்கள் அன்பாய் இருப்பார்கள்
அவர்கள் சொந்தக்காரர்கள் இடத்திலே அவர்கள் அன்பாய் இருப்பார்கள்
அவர்கள் ஊர் காரர்கள் இடத்திலே அவர்கள் அன்பாய் இருப்பார்கள்
அவன் கட்சிக்காரர்கள் இடத்திலே அவர்கள் அன்பாய் இருப்பார்கள்
கடவுள் நம்பிக்கையும்
நம்பிக்கையேகடவுளும்
கடவுளை நம்பினால் தான் சக்தி தருவார் எனச் சொல்கிறார்கள்
கடவுளை நம்பினால் தான் கஷ்டங்களை தீர்ப்பார் என்று சொல்லுகிறார்கள்
கடவுளை நம்பி வழிபட்டால் தான் செல்வம் பெருகும் என சொல்லுகிறார்கள்
இப்படியாக நம்பிக்கையை நமக்கு வேரூன்ற விதைத்து கொண்டார்கள்
இன்னமும் சொல்லப் போனால் நம்பிக்கைதான் கடவுளாக இருக்கிறார் அந்த நம்பிக்கை யார் கொடுக்கிறார்கள்? எப்படி கிடைக்கிறது அந்த நம்பிக்கை என்ற கடவுள் யார் நமக்கு உற்சாகத்தை அளிக்கிறார்கள் என்றால்
என்னிடத்தில் எதுவும் இல்லை என்ற போதிலும் இவர் எனக்காக இருக்கிறார் எப்போதும் என்னிடத்தில் இருக்கிறார் என்ற நண்பன் மேல் வைக்கிற நம்பிக்கையும் மிகப் பெரிய வெற்றியின் பேராயுதம் தான் கடவுளின் சக்தியை போலத்தான்
அந்த சக்தியானது
அந்த நம்பிக்கையானது
இதோ அந்த சிறிய வயதிலேயே அந்த ஒன்றும் அறியாத பாலிய வயதிலேயே உங்களிடம் கிடைத்த அந்த அன்பு தான் எனக்கு இன்று வரை மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது
நினைவுஅலைகளில்ரீங்காரமாய்
அந்த சிறிய வயதினிலே சின்ன மனதினிலே சின்ன சின்ன ஆனந்தமாய் வற்றாத வசந்த ஓடைகளாய் வாசம் மாறாத பாச பூக்களாய் இன்னும் மலரந்து கொண்டே இருக்கும் மணந்து கொண்டே இருக்கும்
தங்கமே தமிழுக்கு ஒரு தட்டுப்போடு
என்ற மெட்டோடு யாராவது ஒருவர் தட்டை கீழே போட்டால் அனைவரும் உணவு இடைவேளை என்று வரிசையாய் நின்றது
இராத்திரி கொள்ளுகொழம்புக்கு காக
ஓடிஓடிநின்னது
சனிக்கிழமை இட்லிக்கும்
ஞாயிறுகறிக்கும் காத்திருந்து உண்ணதும்
இன்னுமும் இனிக்கிறது ஈரக்குழையிலே
பட்டக்காரமெஸ்சம்பார்குருமாவுக்கு
பந்தயம் கட்டி படுந்துறங்கும்பாயை
சுருட்டி புடிச்சு பேட் டாக்கி விளையாடியது
யாரால முடியுமப்பா!?
லாங்சைஸ்நோட்டை ஸ்டம்பாக்கி
பேரகான் செருப்பை பேட்டாக்கி
சச்சின் கங்கூலி
டிராவிட் ஜடேஜாவா வை
பிரிச்சு வெச்சு
அன்னைக்கே ஐபிஎல் விளையாட்டை
ஆரம்பிச்சதும் நாமதானநண்பா
நண்பன் என்றாலே நம்பிக்கைதான் ஞாபகம்
நம்பிக்கை என்றாலே கடவுள்தான் ஞாபகம்
ஆம் நண்பர்களே ஓடி ஓடி உழைத்து கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்துக்களை பார்க்கிலும்
எனக்கு சிறுவயதில் கிடைத்த உங்களின் உன்னத நட்பு தானே எனக்கு கிடைத்த மகா வரமாய் எப்போதும் கருதிக் கொண்டிருக்கிறேன்
தங்கதமிழன்