லட்சக்கணக்கான மக்கள்
கூடியிருந்தார்கள்
காமராஜர் நல்லவரா கெட்டவரா
எனக் கேட்டேன்
எல்லோரும் ஒரே பதிலைச் சொன்னார்கள் அரங்கமே அதிர்ந்தது
அவரைப்போல் ஒரு நல்லவர் இல்லை என்று
அப்படியானால் உங்களிடம் இன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றேன்
எப்படி நல்லவர் என்று சொல்கிறீர்கள்
தனக்காக வாழவில்லை மக்களுக்காக வாழ்ந்தவர் தூய்மையான அன்புடையவர் என்றெல்லாம் சொன்னார்கள்
சரிதான் அவர் நல்லவர் தான் அவரைப்போல் ஒரு நல்லவர் தலைவர் யாருமில்லை
அப்படியானால் அந்த நல்லவரை அந்த உத்தமரை அந்த புண்ணியவானை அந்த கர்மவீரரை தோற்கடித்த ஓட்டே போடாமல் தோற்கடித்த தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா என கேள்வி கேட்டேன் 10 ஆண்டுகளாகியும் இன்னமும் பதில் இல்லை