நான் பார்த்த பைத்தியக்காரன் 2
பகல் வெளிச்சம் மங்கும் மாலையில்
ஊர் ஊராக குடம் விற்பவன்
வீட்டுக்கு போகும் வழியில்
தாகத்தில் நாவறண்டுபோனது
சிறிய கிராமத்தில் சாலையோரத்தில்
சொட்டிட்டு கொண்டிருந்த
பைப்பை கண்டதும் சைக்கிளைநிறித்திவிட்டு
வேகமாக இறங்கினான் தாகம் தீர்க்க
யார்ர்ரர....நீ எந்த ஊர்ரரர...
மிரட்டும்குரள் கேட்டு திடுக்கிட்டு பார்த்தான்
இரண்டுபேர் கோவமாய்பார்த்திருந்தார்கள்
பயந்தபடி பவ்வியமாய்
ஊரையும் பேரையும் தமிழில் சொன்னான்
இனிமையாக.
எந்த ஜாதியா நீ.
என சொற்களை முள்களால்திரிக்கப்பட்ட
உயிரை பறிக்கும் கயிரை அவன் கழுத்தில் வீசினார்கள்
நீ எல்லாம் இங்கதண்ணிபிடிக்கூடாதுஎன சொல்ல
தாகமாக இறங்கியவன்
சோகமாக ஏறினான்
சில ஆண்டுகள் கடந்து
இப்போது ஹிந்திகாரன் அந்த கிராமத்து வழியிலே
நடந்து போகிறான்
வாமச்சாடீசாப்பிட்டுபோலம் என அன்றைக்கு
ஜாதிகேட்டவன்கூவிஅழைக்கிறான்
ஹிந்தில ரெண்டு கெட்ட வார்த்தையை
சிரித்துக்கொண்டே சொல்ல
தன்னை புகழ்ந்து பேசுவதாக எண்ணி
நன்றியைஆங்கிலத்திலிருந்துஇழுத்து
தா...ங்சுசொல்கிறான்
வெளிமாநிலத்தில் தாழ்ந்த ஜாதியாக வாழ்ந்தவர்கள் இங்கே பிழைக்கவந்தால்
உயர்ந்த ஜாதியனுக்கு மச்சான் ஆகிறான்
அது எப்படி?
ஓஹோ இதுவும்
ஒருவித பைத்தியக்காரத்தனம் தானே