Header Ads Widget

Responsive Advertisement

வரலாறு காணாத தோல்விக்கு இதுதான் காரணம்

 எத்தனை ஆண்டுகள் கட்சிகளாக இருந்தாலும்…

ஸ்டாலின் தோல்விக்கு



எத்தனை வருட கட்சிகளாக இருந்தாலும்
இனியும் எத்தனை புதிய கட்சிகள் தோன்றினாலும்

உங்களிடம் கேட்பதற்கான கேள்விகள்
இது மட்டுமே இருக்கின்றன…

ஒருத்தருக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல்
அவங்க காசுலயே வரவச்சு
உங்களால கூட்டத்தைக் கூட்ட முடியுமா?

நீங்க பவளவிழா கட்சி ஆனாலும் சரி
பலமுறை முதலமைச்சரான கட்சியானாலும் சரி
எங்கிட்ட கேட்பதற்கான கேள்வி இதுதான்…

இத்தனை கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிலே
ஒரு நல்லது கூட
ஒருவருக்குச் செய்யாமல்
உங்களால ஆட்சியைப் பிடிக்க முடியுமா?



மேலும் படிக்க : துறவியான புத்தரைபோல்



நீங்க எத்தனை வருஷம் முதலமைச்சரா இருந்தாலும் சரி
எத்தனை வருஷம் அனுபவசாலியா இருந்தாலும் சரி
என்னிடத்தில் கேட்பதற்கான கேள்வி
இதுதான்…

குற்றவாளிக்கு சீட்டு கொடுத்து
இவர் குற்றவாளி என்று தெரிந்தும்
மக்கள் ஓட்டு போடுவாங்களா?

இப்படியாக ஒரு குற்றவாளியை
ஒரு தொகுதியில் நிற்கவைத்து
உங்களால ஒரு MLA-வை உருவாக்க முடியுமா?

இப்போது ஆகி இருக்கிறார்கள்…
குற்றவாளி என்று தெரிந்தும் கூட
ஓட்டு போட்டு இருக்காங்க…

ஆறு மாதத்துக்கு முன்னால்
மது போதையில் சாலையோரம் படுத்து கிடந்தவனுக்கு
இந்த மாதம் MLA பதவி…
ஏன், அமைச்சர் பதவி கூட…

இந்த மாதிரி நீங்க
பல வருட முதலமைச்சரான கட்சியில்
ஒரு குடிகாரரை நிற்கவைத்தால்
மக்கள் உங்களுக்கு ஓட்டு போடுவாங்களா?
இல்ல… நீங்கதான் சீட்டு கொடுப்பீங்களா?

ஜோசியத்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று சொல்றாங்க…
அது பொய் என்று தெரிந்தும்
மக்களவையில் ஜெயிக்க வைக்கிறாங்க…
ஓட்டு போடுறாங்க…

உங்க கட்சியில
இந்த மாதிரி பொய் பேசுறவனை நிற்கவைத்து
ஜெயிக்க வைக்க முடியுமா?
இல்ல மக்கள் எல்லாம் உங்களுக்கு ஓட்டு போடுவாங்களா?

பிரியாணி பொட்டணம் இல்லாமல்
உங்க கட்சிக்கு கூட்டமில்லை…
200 ரூபாய் காசு கொடுக்காமல்
உங்க கட்சிக் கூட்டத்துக்கு
ஒருத்தர் வர மாட்டாங்க…





ஆனா…
அவங்க 200 ரூபாய் செலவு பண்ணி
ஒரு கட்சி கூட்டத்துக்கு போறாங்கன்னா
அதுதான் அறிவாளித்தனம்…

நீங்க நாட்டுக்கு நல்லது செய்திருக்கணும்…
எத்தனை நல்லது பண்ணாலும்
ஓட்டுக்கு கொஞ்சமாவது பணம் கொடுத்தால்தான்
ஓட்டு போடுவாங்க…

ஆனா…
ஒருத்தருக்கும் ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாமல்
ஒருத்தருக்கு ஓட்டு போடுறாங்கன்னா
அதுதான் அவர்களுடைய திறமைசாலித்தனம்…

ஒரு சின்ன குழந்தைகளை வைத்து
ஒரு தேசத்தையே ஆள முடியுமா?
அது சட்டத்துக்கு புறம்பானது…
நீங்க விலகிக் கொள்வீர்கள்…

ஆனா…
அந்த குழந்தைகளை வைத்து
ஆட்சி பிடிச்சிருக்காங்க…
அதுதான் அறிவாளித்தனம்…

இந்த மக்களை
இத்தனை வருடம் ஆட்சி அமைச்சு இருக்கீங்க…
ஆனா…
உங்களால
ஒருத்தரைக்கூட முழுமையாக முட்டாளாக்க முடியலையே…
முட்டாளாக்க தெரியலையே…

இதுதான் சார்…
வரலாறு காணாத தோல்விக்கு
முக்கிய காரணம்…!

Post a Comment

0 Comments