அன்று புத்தர் இன்று நான்! மனிதர்களை மறப்பது துறப்பதற்கு இன்பமாகும்

 அன்றைக்கு புத்தர்… இன்றைக்கு நான்

மரத்தடியில் தங்கதமிழன் 



இதோ இந்த உலகத்தின் கடைசி ஓரத்தில் வந்திருக்கிறேன்…

இனி நீங்கள் என்னை பார்க்க வர வேண்டாம்.


நானும் உங்களை பார்க்க முடியாது.


உங்களுடன் பேசுவதையும்

பழகுவதையும்

நிறுத்திக் கொள்வதற்காகவே…

குறிப்பாக

மனிதர்களிடம்

பழகக் கூடாது என்பதற்காகவே…


மேலும் படிக்க :பெண்ணாய் பிறப்பது பாவமா?


இந்த அடர்ந்த காடுகளில்

தனி ஒருவனாக

அன்று புத்தரை போல

இன்று நான்

ஒரு படர்ந்த பச்சை மரத்தின் நிழலில்

அமர்ந்து கொண்டேன்.


போதி மரத்தடியில்

புத்தருக்கு ஞானம் தோன்றியது…


எனக்கு ஞானம் தோன்றியதால்தான்

உங்களை விட்டு

இவ்வளவு தூரம் பிரிந்து வந்திருக்கிறேன்.


எனக்கு அறிவு வந்ததுனால்தான்

நான் இவ்வளவு தூரம்

உங்களை மறக்க வந்திருக்கிறேன்.


எனக்கு புத்தி தெளிந்ததினால் தான்

உங்களை விட்டு விலகி இருக்கிறேன்.


மேலும் படிக்க : திருடர்கள் எப்படி வருவார்கள்



இந்த மரத்தின் நிழல்

எனக்கு போதுமானது…

இவைகளை தவிர

வேறு ஏதும்

எனக்கு தேவையில்லை.


தேள்கள் கடித்தாலும்…

பாம்புகள் கொட்டினாலும்…

சிங்கங்கள் விழுங்கிச் சென்றாலும்…

எனக்கு சந்தோசம் தான்.


மனிதர்களிடம் பழகாமல் இருப்பது

நிலையான நிம்மதிக்கான பூட்டு.


மனிதர்களை நினைக்காமல் இருக்கும்

இதயத்தில் தான்

சந்தோசங்கள்

நித்தியத்திற்கும் தங்கிக் கொள்கின்றன.


போதி மரத்திற்குச் சென்று தான்

புத்தர் துறவு கொண்டார்…

அதாவது

யாரும் இல்லாத இடத்தில் தான்

அவர் உண்மையாக துறவு கொண்டதாக சொல்கிறார்கள்.


நானும் ஒரு உண்மையை சொல்லுகிறேன்…


நீங்கள் இல்லாத இடத்தில் தான்

நான் நல்லவனாக வாழ முடியும்.


நீங்கள் இல்லாத இடத்தில் தான்

நான் மனிதனாக

மகிழ்ந்து இருக்க முடியும்.


உங்களுடன் சேர்ந்தால்

நான் பாவியாகி விடுவேன்…


நான் இப்படியே இருந்து கொள்கிறேன்.

என்னை யாரும் பார்க்க வேண்டாம்…

என்னை பார்க்க

யாரும் இங்கே வந்துவிட வேண்டாம்.


— தங்கத்தமிழன்

Post a Comment

0 Comments