Header Ads Widget

Responsive Advertisement

ஊழல் கட்சி கூடாரம் ஆகிறதா தூய கட்சி தவெக?

 ஊழல் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது தூய கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள் 

ஊழல் கட்சியின் கூடாரம் ஆகிறதா தூய கட்சி தவெக?

விஜய் கட்சியில் அதிமுக எம் எல் ஏ கள் கற்பனை புகைபடம்



தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், புதிய மாற்றத்தை வாக்குறுதி அளித்து அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜய்.

தேர்தல் பிரச்சாரங்களில்
“திமுக தீய சக்தி…
தவெக தூய சக்தி…”
என்று விஜய் பேசியது மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது.




அவரது எழுச்சிக்கு முக்கிய காரணம் ஊழலுக்கு எதிரான பேச்சுகள்தான்.
“இரண்டு பெரிய கட்சிகளும் ஊழலில் மூழ்கியுள்ளன…
அந்த ஊழலை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்…”
என்ற கருத்தை மக்களிடையே தொடர்ந்து வலியுறுத்தியதால், மக்கள் விஜயை மாற்று அரசியலின் முகமாக பார்க்கத் தொடங்கினர்.

திரைத்துறையில் ஏற்கனவே கோடிகளை சம்பாதித்த ஒருவர் என்பதால்,
“பணத்திற்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல…
ஆகவே ஊழல் செய்ய மாட்டார்…”
என்ற நம்பிக்கையும் மக்களிடம் உருவானது.

ஆனால் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது —
இன்று அதிமுகவில் இருந்து மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருப்பது.

ஏற்கனவே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்த பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நேரடியாக அதிமுக எம்எல்ஏக்களே தவெகவில் சேர்ந்து இருப்பது மக்களிடையே புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.





ஊழல் குற்றச்சாட்டுகளுடன் பேசப்பட்ட அரசியல்வாதிகளையே புதிய கட்சி இணைத்துக் கொண்டால்,
அது உண்மையில் தூய அரசியலா?
அல்லது ஊழல் அரசியலுக்கான புதிய கூடாரமா?

“ஊழலை ஒழிப்போம்” என்று சொல்லி ஆட்சிக்கு வருவது எளிது.
ஆனால் அதே பழைய அரசியல் முகங்களையே தன்னுடன் வைத்துக்கொள்வது, அந்த கொள்கையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது.

இதனால் தற்போது மக்கள் மத்தியில் ஒரு புதிய சந்தேகம் உருவாகியுள்ளது:

“தவெக உண்மையில் தூய சக்தியா?
அல்லது பழைய ஊழல் அரசியலின் புதிய முகமா?”

இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது இனி விஜயும் அவரது கட்சியும் தான்.

Post a Comment

0 Comments