ஊழல்|மனித நட்பு|குடும்பத்திலும்|ஊழல்
மனித உறவுகளுக்குள் ஊழல்
![]() |
| அன்பிலும் ஊழல் |
ஊழல் என்ற வார்த்தையை நாம் பெரும்பாலும் அரசியலோடு மட்டும் இணைத்து பார்க்கிறோம்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அமைப்புகள் — இவைகளையே ஊழல் என்று நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில், ஊழல் என்பது அலுவலகங்களிலும் அரசியலிலும் மட்டும் இல்லை.
அது மனிதர்களின் அன்றாட உறவுகளுக்குள்ளும் மறைந்து வாழ்கிறது.
ஒருவர் காதலனிடம் அன்பைப் போல நடித்து செல்போன் வாங்கிக்கொண்டு, வேறொருவரிடம் காதலாக பேசுவது — அது ஒரு உணர்ச்சி ஊழல்.
ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு, வாழ்க்கையை வேறொருவருடன் அமைத்துக்கொள்வது — அது நம்பிக்கைக்கான ஊழல்.
கணவரிடம் எல்லா வசதிகளையும் பெற்றுக்கொண்டு, மறைவாக வேறொருவரிடம் காதல் தேடுவது — அது உறவின் மீது செய்யப்படும் துரோகம்.
நண்பனிடம் தேவையுள்ள வரை நெருக்கமாக இருந்து, தேவைகள் முடிந்த பின் அவனை தூற்றிப் பேசுவது — அது நட்புக்குள்ளான ஊழல்.
அதனால் தான், ஊழல் என்பது பணத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
அது மனிதர்களின் மனசாட்சியோடும், உண்மையோடும் சம்பந்தப்பட்ட ஒன்று.
இன்று தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள விஜய் அவர்கள், காவல்துறை, வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பல துறைகளில் ஊழலை ஒழிக்க கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார் என்பது வரவேற்கத்தக்க விஷயம்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடமும் இருக்கிறது.
ஆனால், சமூகம் முழுவதும் உண்மையாக மாற வேண்டுமெனில், அரசியல் ஊழல் மட்டும் ஒழிந்தால் போதாது.
மனித உறவுகளுக்குள்ளும் இருக்கும் ஏமாற்றங்கள், போலித்தனங்கள், நம்பிக்கை துரோகங்கள் ஆகியவற்றும் மாற வேண்டும்.
ஏனெனில்,
ஒரு மனிதன் அலுவலகத்தில் மட்டும் நேர்மையாக இருந்து பயனில்லை.
அவன் உறவுகளிலும் உண்மையாக இருக்க வேண்டும்.
நம்பிக்கையை ஏமாற்றாத மனிதர்கள் அதிகரிக்கும் நாள்தான் உண்மையான ஊழல் ஒழியும் நாள்.
கவிதை திமுக தோல்விக்கு காரணம் என்னஅரசியல் பகுப்பாய்வு
ஊழல் என்பது வேறு ஒன்றும் இல்லை…
ஊழலை புரியும் படியாக சொல்லச் சொன்னான்…
காதலனிடம் செல்போன் வாங்கிக்கொண்டு
வேறொருவரிடம் பேசுவது…
காதலனிடம் காசு வாங்கிக்கொண்டு
வேறு ஒருவரை கல்யாணம் செய்வது…
கணவரிடம் எல்லாம் வாங்கிக் கொண்டு
வேறொருவரை கள்ளத்தனமாக காதலிப்பது…
நண்பனிடம் வாங்கும் வரை
அமைதியாக இருப்பது…
வாங்கிய பின்
தூற்றிப் பேசுவது…
ஆம்…
அரசியலில் மட்டும் இல்லை…
அன்றாடம் தொடங்கும்
மனித உறவுகளுக்குள்ளும்
ஆயிரம் ஊழல்கள் இருக்கின்றன…
— தங்கதமிழன்

0 Comments