தங்கதமிழன்|சமூக சிந்தனை| நம்பிக்கை
நம்பிக்கை
![]() |
| நம்பிக்கை கைகொடுக்கும் கற்பனை புகைபடம் |
நீங்கள் எந்தக் கடவுளை வேண்டுமானாலும் நம்பலாம்.
எந்தக் கட்சியை வேண்டுமானாலும் நம்பலாம்.
உங்கள் வாழ்க்கையில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம்.
ஆனால்…
“உங்களை யார் நம்புகிறார்கள்?”
என்பதுதான் இந்த உலகத்தில் மிகப்பெரிய உயர்வாகும்.
நம்பிக்கைதான் வாழ்க்கையின் உயிர்.
வாழ்வதற்கான மூச்சு.
உறவுகளின் அடித்தளம்.
மனிதர்களை ஒன்றாக இணைக்கும் மறைமொழி.
நீங்கள் எந்தக் கோயிலுக்குப் போனாலும்,
எந்த இடத்திற்குப் போனாலும்,
ஏதாவது ஒரு மனிதரை சந்திக்க நேரிடும்.
அவர்களுடன் பழக நேரிடும்.
அந்தப் பழக்கம்…
ஒரு நாள் நம்பிக்கையாக மாற வேண்டும்.
அந்த நம்பிக்கையை உருவாக்குவது
உங்களுடைய ஒழுக்கமும் உண்மையும் தான்.
ஒழுக்கமும் அன்பும் எல்லோரிடமும் இருப்பதில்லை.
அதனால் தான் பலர் வாழ்க்கையில் ஏமாந்து போகிறார்கள்.
பலர் ஏழைகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள்.
உங்கள் வாழ்க்கையின் உண்மையான செல்வம்
பணம் அல்ல.
புகழும் அல்ல.
ஒழுக்கமும் உண்மையும் தான்.
அந்த ஒழுக்கமும் உண்மையும் தான்
உங்களை மற்றவர்களின் மனதில்
நம்பிக்கைக்குரிய மனிதராக காட்டுகிறது.
அந்த நம்பிக்கைதான்
ஒருவர் உங்களுக்கு உதவ முன்வர காரணமாகிறது.
அந்த நம்பிக்கைதான்
ஒருவர் உங்களிடம் நட்பாக நெருங்க காரணமாகிறது.
அந்த நம்பிக்கைதான்
ஆபத்தான நேரத்தில் உங்களுக்கு துணையாக நிற்கிறது.
அந்த நம்பிக்கைதான்
உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுகிறது.
அந்த நம்பிக்கைதான்
உங்களை உண்மையான செல்வந்தராக மாற்றுகிறது.
ஆகவே…
உங்கள் வாழ்க்கையை உயர்த்தப் போகும்
உண்மையும் ஒழுக்கமும் என்ற நம்பிக்கையை
ஒரு தங்க நகை போல
உங்கள் இதயத்தில் அணிந்து கொள்ளுங்கள்.
உங்களை மற்றவர்கள் நம்பும் படியாக
உண்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறும்.
— சமூக சிந்தனையாளர் தங்கத்தமிழன்

0 Comments