பால் குடிக்கும் நேரத்தில் ஒரு காதல்
![]() |
| பால் குடிக்கும் நேரத்தில் ஒரு காதல் |
நான் ஒரு சின்ன ஊருக்குள்ள
ஒரு முக்கியமான வேலையா வந்திருக்கிறேன்…
அந்த வேலை எப்ப முடியும்,
எப்படி முடியும் என்று தெரியாது…
வேலை முடிந்ததும்
அந்த ஊரை விட்டு
நான் போய்விட வேண்டும்…
அந்த வேலைக்காக
அந்த ஊருக்குள்ள
இன்னும் எத்தனை நாள் இருப்பேனோ தெரியாது…
அதுவரைக்கும்
நான் பல பேரோடு பழகலாம்…
பேசலாம்…
சொந்தங்கள் போல பழகிக் கொள்ளலாம்…
நண்பர்களாக பழகிக் கொள்ளலாம்…
புதுசா ஒரு ஊருக்கு வந்திருக்கிறோம்…
எல்லாரிடமும் நல்லவராக பழகுவது
நல்ல விஷயம் தானே…
மேலும் படிக்க:கடவுள் எப்படி இருப்பார் தங்கதமிழன் கவிதைகள்
அந்த வேலைக்காக
பல இடங்களுக்கு போக வேண்டியிருக்கிறது…
அதே ஊருக்குள்ள
சுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது…
எனக்கு டீக்கடை என்றால்
ரொம்பப் பிரியம்…
டீக்கடையில
பால் குடிப்பது
எனக்கு ரொம்ப பிடிக்கும்…
அதிலும்
பெண்கள் டீ போடுற கடைகள்
எனக்கு இன்னும் பிடிக்கும்…
அதனால்தான்
அழகான பெண்கள்
எந்த கடையில இருக்காங்களோ
அங்கே எல்லாம்
வாடிக்கையாக போயிட்டு
பால் குடித்துக்கொண்டே இருப்பேன்…
ஏதோ ஒரு முக்கியமான வேலைக்காக
ஓடிக்கொண்டிருக்கிறேன் நான்…
மேலும் படிக்க: வரலாறு காணாத தோல்விக்கு
ஆனா
டீக்கடைக்கு போனதும்
பெண்கள் போட்டுக் கொடுக்கிற அந்த பாலை
நான் காதலிக்கிறேன்…
அல்லது
அந்த பெண்களையே கூட
காதலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்…
அது என்னமோ
அந்த பால்ல
ஏதோ ஒரு போதை இருக்கிறது போல…
அந்த பாலை குடிக்கிற வரைக்கும்
நான் அவங்களை காதலித்துக்கொண்டே தான் இருக்கிறேன்…
பால் குடித்து
கொஞ்ச நேரத்துல
நான் கக்கிவிடுகிறேன்…
அதுவரைக்கும்
நான் அவர்களை காதலித்துக்கொண்டே இருக்கிறேன்…
அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்…
கக்கி முடித்ததும்
எனக்கு வேலை ஞாபகம் வந்துவிடுகிறது…
நான் செய்ய வேண்டிய வேலை
என் நினைவுக்கு திரும்பி வந்துவிடுகிறது…
பிறகு
அந்த டீக்கடையை விட்டு
எழுந்து போய்விடுகிறேன்…
என் வேலையை பார்க்கிறேன்…
மீண்டும்
ஒரு பெண் டீ போடும் கடைக்கு போவேன்…
பால் கேட்பேன்…
அவள் பால் போடும் விதத்தை ரசிப்பேன்…
அப்போது
அவளை காதலிப்பேன்…
அந்த பாலை குடிப்பேன்…
குடிக்கும் நேரத்தில்
அது இனிமையாக இருக்கும்…
பத்து நிமிடத்தில்
அந்த பாலை கக்கிவிடுவேன்…
மீண்டும்
அந்த காதலை நிறுத்திக்கொண்டு
என் வேலையை பார்க்க
போய்விடுவேன்…
பால் குடித்து கக்குற
அந்த ஐந்து நிமிடத்துக்குள்ள தான்
காதலின் ஆயுசு இருக்கிறது…
இப்போ
என் காதலைப் பற்றி
யாரும் தவறாக நினைக்க வேண்டாம்…
என்னுடைய வேலைகளுக்கு இடையில்
நான் காதலிப்பதற்கும்
பால் குடிப்பதற்கும்
கிடைத்திருக்கும்
சில நிமிடங்கள்
அந்த ஐந்து நிமிடங்கள் தான்…
அந்த பால் கக்கிவிடும் நேரம் வரைக்கும் தான்
அதில் ஒரு போதை இருக்கிறது…
அதில் ஒரு காதல் இருக்கிறது…
பிறகு
நான் நானாகி விடுகிறேன்…
என் வேலை
எனக்கு ஞாபகம் வந்துவிடுகிறது…
நாளை
மீண்டும் ஒரு டீக்கடைக்கு போவேன்…
மீண்டும் ஒரு பெண்ணை காதலிப்பேன்…
அவள் கொடுக்கும் பாலை குடிப்பேன்…
அந்த பால் கக்கும் வரைக்கும்
அவளை காதலித்திருப்பேன்…
இப்போது
எனக்கு வேலை ஞாபகம் வந்துவிட்டது…
நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்…

0 Comments