Header Ads Widget

Responsive Advertisement

கடவுள் எப்படி இருக்க முடியும் சமூக சிந்தனை

 கடவுள் எப்படி இங்கே இருக்க முடியும் சமூக சிந்தனை கவிதை 

கடவுள் எப்படி இருப்பார் 


கடவுள் எப்படி இருப்பார்

கடவுள் எப்படி இருப்பார் என்று
நீங்களே சொல்லுங்கள்…
ஒவ்வொருவரும் சொன்னார்கள்
ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

உருவங்களிலிருந்து
வணங்குவதை வரை
அவரவர்க்கு பிடித்த மாதிரி
“இப்படித்தான் இருப்பார்” என்று
சொன்னார்கள்.

ஆனால்…
“உண்மையில் இப்படித்தான் இருக்கிறாரா?”
என்ற ஒரு உறுதியான கேள்விக்கு மட்டும்
தடுமாறுகிறார்கள்.

உண்மையிலேயே சொல்லுங்கள்…
கடவுள் எப்படி இருக்க முடியும்?

அவ்வளவு பெரிய கடவுளை
அந்த சின்ன கோயிலில்
அடைச்சு வைக்க முடியுமா?

தங்க நகை போட்டு
கடவுளின் மனசை மயக்க முடியுமா?

பூமாலை வாங்கிக் கொடுத்து
அதன் வாசத்தில்
கடவுளை நேசிக்க முடியுமா?

உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லுங்கள்…
கடவுள் எப்படி இருப்பார்?





பூஜை செய்வதிலா இருக்கிறார்?
தலைமுடி காணிக்கையிலா இருக்கிறார்?
கோழி அறுத்து ரத்தம் கொடுப்பதிலா இருக்கிறார்?
ஆடு வெட்டி பிரியாணி செய்வதிலா இருக்கிறார்?

சொல்லுங்கள்…
உங்களின் செயல்களில்
கடவுள் எப்படி இருக்கிறார்?

இரண்டு வயது குழந்தையை
பாவமே தெரியாமல் கொன்றீர்களே…
அதை பார்த்துக்கொண்டு
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

பத்து வயது சிறுமியை
பாலியல் கொடுமை செய்து கொன்றீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

பதினாறு வயது குழந்தையின் வாழ்க்கையை
ஒரு வீடியோவால் முடித்தீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

உயிராய் காதலித்த பெண்ணை
பேருந்து நிலையத்தில் வெட்டினீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

திருமணமான பிறகும்
கள்ளக்காதலுக்காக
கணவனை கொன்றீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

நகைக்காக வீடு புகுந்து
உயிர்களை பறிக்கிறீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

சாமி தேடி வரும் பக்தரிடமே
சபல புத்தியை காட்டுகிறீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

இறந்த உடல்களைக்கூட
அமைதியாக விடாமல்
அவமதிக்கிறீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?






வயதான பெண்களைக்கூட
வேட்டையாடுகிறீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

சின்ன பிள்ளைகளின் மனசையும்
உடலையும்
அழிக்கிறீர்களே…
அதை பார்த்து
கடவுள் இங்கே இருக்க முடியுமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…
என்ன செய்கிறீர்கள்…
எப்படி வாழ்கிறீர்கள்…
எல்லாத்தையும் தினமும் பார்த்துக்கொண்டு
இதற்குமேல்
அவரால் இங்கே இருக்க முடியுமா?

மனைவிக்கு இப்படியொரு நிலைமை என்றால்
“என் நிலைமை என்ன ஆகுமோ?” என்று
பயந்து தப்பிக்க முயற்சிக்கிறது
நீங்கள் வளர்க்கும் நாய் கூட.

“இவன் ஒருநாள் என்னை வெட்டி தின்னுவான்” என்று
ஒவ்வொரு நாளும்
பயத்தோடு வாழும்
ஆட்டுக்குட்டிக்குத்தான் தெரியும்
மனிதனின் பாசம் எவ்வளவு பொல்லாதது என்று.

அப்படியிருக்க…
கடவுள் எங்கே?
எப்படி இருக்க முடியும்?

நீங்கள் மேளதாளம் தட்டி
சாமியை அழைக்கிறீர்கள்…
ஆனால்
சாமிதான் வருவதற்கு பயப்படுவார் போல.

“இவர்கள் எதற்கோ அழைக்கிறார்கள்…
இவர்கள் பொல்லாதவர்கள்…
இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்…” என்று
கண்காணாத தூரத்திற்கு
ஓடிப்போவார் போல.

நீங்கள் அழைத்த உடனே
உங்களிடம் வருவதற்கு
உங்களை பற்றி
அவருக்கு தெரியாதா?

வேண்டுமானால்
சாமி வந்தது போல ஆடி
மனதுக்கு பட்டதைச் சொல்லி
மக்களிடம் வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள்.

“இதை செய்தால் அதிசயம் நடக்கும்” என்று
மனிதர்களை ஏமாற்றிக் கொள்ளுங்கள்.

“இதை செய்தால் கஷ்டம் தீரும்” என்று
உங்கள் நண்பர்களிடமே
பொய் சொல்லிக் கொள்ளுங்கள்.

“கடவுள் இப்படித்தான் இருக்கிறார்” என்றும்
சொல்லிக் கொள்ளுங்கள்.

ஆனால்…
யாராவது உண்மையாக
“கடவுள் எப்படி இருப்பார்?” என்று கேட்டால் —

மனிதர்கள் வாழும் இந்த நாட்டில்…
மிருகங்களை விட
கேவலமான புத்தியுடன்
மனிதர்கள் வாழும் இந்த நாட்டில்…

இங்கே…
கடவுள் எப்படி இருக்க முடியும்?
எப்படி இருக்க முடியும்?

— தங்கதமிழன்

Post a Comment

0 Comments