உண்மையாய் கடவுளை கண்டேன் தங்கத்தமிழர் கவிதைகள்

 

 உண்மையாய் கடவுளை கண்டேன் 

தங்கத் தமிழன் கவிதைகள்

கவிதை ஓவியம்





கோடி கோடியாய்

செலவு செய்து கட்டப்பட்ட

கோவில்களில் காணாத

கடவுளை…


பல ஆயிரம் அர்ச்சகர்கள்

அர்ச்சனை செய்தும்

உணர முடியாத

கடவுளை…


தங்கத்தினால் வடிக்கப்பட்ட

அழகான சிலைகளிலும் கூட

காண முடியாத

கடவுளை…


“பொய் சொன்னால்

சாமி கண்ணைக் குத்தும்…”


என்ற

ஒரு சிறிய பொய்

எனக்குள் நுழைந்து

மேலும் படிக்க :விஜய் கடவுளா?மனிதனாக?



ஏதோ ஒரு நேரத்தில்

எழுகின்ற

எல்லா பொய்களையும்

கொன்று கொண்டே இருக்கிறது…


அதுதானே

உண்மையான இறைவன்…


“ஒருவரை

பார்க்க வச்சிட்டு சாப்பிட்டால்

வயிறு வலி வந்து விடும்…”


என்ற

சின்ன பொய்தான்


இன்னொருவரின் பசியை உணரும்

மனிதநேயமிக்க மனிதனாக

என்னை வாழச் செய்தது…


இந்த அன்பில்தான்

நான்

கடவுளைக் கண்டேன்…


— தங்கதமிழன்

Post a Comment

0 Comments