Tvk|vijay |god
விஜய் கடவுளா? நாடு முழுவதும் கோயில் கட்டி பூஜை செய்யப்படுமா?
![]() |
| விஜய் கடவுளா?மனிதரா? |
புதுச்சேரியில் சட்டமன்ற எம்எல்ஏவாக பொறுப்பேற்கும் போது பதவியேற்கும் போது கடவுள் மீது ஆடையாக என்று சொல்லியபடி விஜயின் போட்டோவை காட்டி உண்மையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் அதைப் பார்த்த அருகில் இருந்த சபாநாயகர் இதை எல்லாம் வெளியிடாதீர்கள் ஏற்கனவே இங்கே 1008 கடவுள்களின் பிரச்சனை தாங்க முடியல இது வேற 1009வது கடவுளா?
என்ன கேள்வி எழுப்பியிருந்தார்
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது அதை பார்க்கும்போது எனக்கு தோன்றியதை எலலாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி தான் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்
விஜய் எப்படி கடவுளானார்
கடவுள் ஆவது எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்கள் எல்லோருக்கும் கடவுளாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த விஜய் திடீரென எப்படி கடவுளானார் அவரை எப்படி என்ன செய்தார் கடவுளாவதற்கு என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தது நான் யோசித்துப் பார்க்கிறேன் திரைத்துறையில் நடித்திருக்கிறார் ஹீரோவாக அவர் நட்சத்திர நடிகர் என்று சொல்லுவதை நான் வரவேற்கிறேன் நம்பிக்கையான நடிகர் என்று சொல்லுவதையும் நான் வரவேற்கிறேன் அது ஏற்றுக்கொள்ளக் கூடியது அதற்காக அவரை கடவுள் என்று சொல்லுவது சரியாகுமா?
நடித்தால் கடவுள் ஆகிவிடலாமா?
இவர் மட்டுமா நடிக்கிறார் எத்தனை பேர் நடித்திருக்கிறார்கள் இவரைவிட எத்தனை உயர்ந்த நட்சத்திர நடிகர் எல்லாம் இருக்கிறார்கள் அவர் என்ன இவர் மட்டும் கடவுள் என சொல்லுவது அப்படி பார்த்தால் நடிக்கிற எல்லார்களும் கடவுளா என்ன கொடுமை இது? நான் மனிதர்கள் தானா என்ற சிந்தனை ரொம்பவும் மேலோங்குகிறது இதை எப்படி சொல்ல முடிகிறது ஒருவர் சினிமாவில் நடித்திருக்கிறார் அவர் அரசியலுக்கு வருகிறார் அதில் வென்று விடுகிறார் அதனால் அவர் முதலமைச்சர் அவ்வளவு தான் முதலமைச்சரானவர் எல்லாம் கடவுள் என்றால் அப்போ நாட்டில் எல்லா முதலமைச்சர்களுக்கும் கோவில் கட்டி சிலை வைத்து பூஜை செய்ய போகிறீர்களா என்ற கேள்வி என்னுள் தொலைத்துக் குண்டுகளை போல
இப்படித்தான் கடவுள்கள் உண்டானார்களா? பிறந்தார்களா?
இந்த சம்பவமானது இதற்கு முன்னால் 2000 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் இப்படியாக வாழ்ந்தவர்களை போல இப்போது நடிகர் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை அவர்களது ரசிகர்கள் கடவுள் என்று சொல்வதைப் போல மூவாயிரம ஆண்டுகளுக்கு முன்னாலும் ஏதோ ஒரு பொறுப்பு வகிப்பதற்காக ஏதோ ஒரு நல்லது செய்து இருக்காங்க இவர் தான் கடவுள் என்று ஒரு கோவில் கட்டிவிட்டார்களோ?
ஒவ்வொரு பொறுப்பிலும் உள்ளவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு இடத்தில் ஒரு கோயிலை கட்டி அதற்கு ஒரு பெயர் வைத்து இதுதான் கடவுள் என்று சொல்லி வணங்கி விட்டார்களோ அதையே நம்மிடமும் இத்தனை ஆண்டுகளும் பரப்பி விட்டார்களோ அதுதான் புராண கதைகளோ அது கதைகளா வரலாறா கற்பனைகளா அன்றைக்கு நடந்ததை போல் தான் இன்றைக்கும் நடக்கிறதா அல்லது இன்றைக்கு நடந்தது போல தான் அன்றைக்கும் நடந்திருக்குமோ என்றெல்லாம் தோன்றுகிறது
மேலும் படிக்க : கத்தியால் கவுரவம் வாழ்வியல் கட்டுரை
எம்ஜிஆர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்
கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாக ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்திருந்தேன் அதிலும் எம்ஜிஆர் என்ற கோயில் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி இருந்தார்கள் இதை இன்னொரு 300 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கோயில்
பிரபலமாகிவிட்டால் எம்ஜிஆர் ஒரு கடவுளாக கொண்டாடுவார்கள் எம் ஜி ஆர் என்ன மதத்தை சேர்ந்தவர் என்று பிரிப்பார்களோ தெரியவில்லை இப்போது விஜய்யை கடவுள் என்று சொல்லுகிறார்கள் இவர் என்ன மதத்தை கடவுள் என்ற தெரியவில்லை
அன்பு உளளவர்கள் இடத்தில் கடவுள் இருக்கலாம்
மனிதன் அன்புள்ளவனாக இருக்க வேண்டும் அன்புள்ள நான் தான் மனிதனாக இருக்க முடியும் ஆகவே மனிதர்களுக்குள் அன்பை விதைக்க வேண்டும் அந்த அன்பை விதைப்பதற்கு கடவுள் என்ற சொல் தேவைப்படுகிறது கடவுள் சொன்னால்தான் மனிதன் ஏற்றுக்கொள் கூடிய மனநிலையை உருவாக்கினார்கள் அப்படியே மனிதர்களை அன்புடையவர்களாக படைக்கப்பட்டார்கள் அந்த அன்பானது புராணக் கதைகளிலும் வரலாற்று கதைகளிலும் அனைத்து மத நூல்களிலும் கடவுள்களில் அன்பைப் பற்றிதான் போதனைகளை மேற்கொள்கிறார்கள் அன்புள்ளவர்களிடத்தில் தான் கடவுள் தங்க முடியும் வாழ முடியும் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடிகிறது அன்புள்ள மனிதரிடத்தில் தான் கடவுள் வாழ முடியும் என்பதை ஏற்றுமுடிகொள்ள முடிகிறது இதுவரைக்கும் சொல்லப்பட்ட கடவுள்கள் எல்லாம் எந்த ஒருங்கிணைப்பு மனிதரும் கண்டுபிடிக்க முடியாத காண முடியாத தூரத்திற்கு கடந்து சென்று விட்டார்கள் அவர்களை அவர்களின் உருவத்திலோ அவர்களின் குணத்திலோ அவர்களை வாழ்ந்த காலத்தில் இருந்ததைப் போலவோ இப்போதும் இருப்பாரோ என்பது இல்லை அவர் கடந்து விட்டார் அவர் எந்த ரூபத்திலும் இருப்பார் என்பதுதான் கடவுள் என்பதற்கான முழு பொருள் இப்படித்தான் இருக்க முடியும் என்று யூகிக்க முடியாத பெயர்தான் கடவுள் அப்படியாக கடந்து வட்டார் ஆனாலும் உள்ளே தான் இருக்கிறார் என்ற பொருள் மட்டும்தான் இங்கே உண்மையாக இருக்கிறது இப்படி இருக்க மனிதனுக்குள் அன்பிருக்கும் போது கடவுளை உணர முடியும் அன்புள்ள மனிதர்களை உருவாக்க முடியும் ஆனால் மனிதனே கடவுள் என்று சொல்லுவது எந்த வழியில் ஏற்றுக் கொள்வது இது அறிவில்ல அவர்களின் செயலா, அறிவில்லாதவர்களின் செயலா என்று பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள்
அரசியல் தலைவர்கள் கடவுள்களா?
ஒரு கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி ஆக ஒரு மாநிலத்திலோ ஒரு நாட்டிலோ
ஆட்சியை பிடித்து விட்டால் அவர்கள் தலைவர்கள் தானே அப்படிப்பட்ட தலைவர்களை கடவுளாக கொண்டாடினால் முன்னொரு காலத்திலும் அப்படியான தலைவர்களை தன் இன்றைக்கு நாம் கடவுளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா
அவர்களைத்தான் ஒரு மதத்தின் பெயர் வைத்து அதற்காக நாம் ஒருவரை ஒருவர் அளித்துக் கொண்டிருக்கிறோமா கருத்து மோதலால் வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறோமா என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது
ஆட்சியைப் பிடிப்பதற்காக முதலமைச்சர் ஆவதற்காக திரைப்படத்தில் ஒன்றை சொல்லுகிறார் இலவசங்களை எல்லாம் தூக்கி எரிகிறார் அரசியல் கட்சி தொடங்கும் போது சொல்லுகிறார் இலவசங்கள் எல்லாம் ஓசு அது எதற்கு என்கிறார் தேர்தல் வந்தவுடன் எல்லாரையும் விட அதிக ஓஸ் கொடுத்து தான் ஆட்சியைப் பிடிக்கிறார் ஆட்சியைப் பிடித்தவுடன் எதுவும் கொடுக்க முடியுமா என யோசிக்கிறார் இப்படி முன்னுக்கு போன் முரணாக பேசி பொய்களை பேசி தன்னுடைய பதவிக்காக ஆசைக்காக வெவ்வேறு விதமாக பேசி ஆட்சியைப் பிடிக்க அவர்கள் கடவுளானால் எப்படி பொய் பேசுகிறவர்கள் எப்படி கடவுளாக முடியும் பதவியில் வகித்தவர்கள் அவர்கள் சாதுரியவாதிகளா இருக்கலாம் புத்தி கூர்மை உளளவர்களாக இருக்கலாம் அதற்காக அவர்களை கடவுள் என்று சொல்லலாமா
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் இந்த உலகம் வாழும் போதும் அந்த உலகத்தில் உள்ள மனிதர்களை யாவரும் இந்த கற்றையை மறக்காமல் நினைத்துக் கொள்ளுங்கள் இவர் கடவுள் இல்லை எல்லா மதங்களையும் வணங்குகிறார் இவருக்கு என்று மதம் எல்லாம் இல்லை ஆட்சியைப் பிடித்ததினால் ஒருவரை கடவுள் என்று சொல்லுவது அப்படியும் சொல்லி நாளை உங்களை வணங்கச் சொன்னால் அவர்களை மதியுங்கள் இங்கே எண்ணற்ற தலைவர்களின் சிலைகள் இருக்கின்றன நிறுவப்பட்டிருக்கின்றன அவர்களுக்கு நீங்கள் மரியாதை செய்யுங்கள் மதியுங்கள் ஆனால் அவர்களை கடவுள் என்று வணங்காதீர்கள் அது உங்களை முட்டாளாக்கும் செயல் உங்கள் அறிவு கூர்மையை மழுங்க வைக்கும் செயல் எனக்கூறி இந்த கற்றியை முடிக்கிறேன்

0 Comments