அப்பா அம்மா கண்முன்னால்

 தங்கத்தமிழன் கவிதைகள் 

அப்பா அம்மா கண் முன்னால்

பூ வாங்க வந்த
புள்ள
கற்பனை ஓவியம்
மேலும் படிக்க:மது ஒழிப்பு சாத்தியமா?


இடது கையில்
முகமருகே செல்போன்
பிடித்தபடி


விலைகேட்டாள்
சொன்னேன்

பார்த்தால்
பத்தாம் வகுப்பு
படிக்கூடிய சின்ன வயது
பாப்பா போல்தான் தெரிந்தது

மூணு முழம் வெட்ட சொன்னாள்

இன்னைக்கு ஏன்
லிப்ஸ்டிக் போடல
செல்போனில் ஆண்குரல்
திடிக்கிட்டேன்

உனக்கு லிப்ஸ்டிக் போட்டா
பிடிக்காது தானே
ஆமா
என்ன கலர் துணி
போட்டுயிருக்கே

உனக்கு தான் துணி
போட்டு இருந்தால்
பிடிக்காதே
இன்னைக்கு என்ன
கலர் எல்லாம் கேக்குறே

வீடியோ காலில்
அவுட் ஸீபீகரில்
அவள் பேசியது
மனதை வெட்டியது

பூவை வெட்டிகொடுத்தேன்
பேசியபடியே
காரில் அம்மா அப்பாவுடன்
ஏறி சென்றாள்

இப்பவரையும்
நல்ல தானே இருந்தே
என்னாச்சு மாப்ள
மாலை கட்டுற மாமா கேட்டார்

கொடூர விபத்தை
நேரில் பார்த்ததை போல
பக்கத்தில் இருப்பவரை
யாரோ வெட்டி
இரத்தம் நம்மேல்
தெறித்தது போல

அந்த பாப்பா பேசிய
வார்த்தைகள்
ஒருகணம் உறைய வைத்தது

என்னால் எதுவும் பேச முடியவில்லை

அன்பை கொன்று
காம ஆசையின் கொடூர மிருகங்களை
அழகினால் வளர்த்து

துரோகங்களும் கொலைகளும் நிறைந்த புதிய உலகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது
காலம்

அம்மா அப்பாவின்
கண்முன்னால் தான்
அந்த சின்ன மகளை
கற்பழித்துக் கொண்டிருக்கிறது

செல்போனும்
வீடியோ காலும்

-தங்கதமிழன்



Post a Comment

0 Comments