ஊழல் ஒழிக்க  போராடும் விஜய்

சாக்கடை அரசியலில்

ஊழல் கொசுக்களை

ஒழிக்க நினைக்கும் முயற்சிக்கு

வாழ்த்துக்கள்



யார் யார் எந்தெந்த

கடவுளுக்கு பக்தியாய் இருக்கிறார்களோ

இல்லையோ


ஏழை மக்களின் ரத்தத்தை

கடித்துக் குடிக்கும்

ஊழல்வாதியான

கொசுக்களுக்கு தினமும் தான்

பத்தியாய் இருக்கிறார்கள்


ஊழல் என்பது வேறொன்றுமில்லை

ஊதியக்குறைவு தான் ஊழலை வளர்க்கின்றன


இங்கே யாருக்கெல்லாம் ஊதியங்கள் குறைவாக இருப்பதாக நினைக்கிறார்களோ

அவர்கள்தான் அந்த ஊழலை வளர்க்கிறார்கள்


இளைஞன் ஒருவனிடம் கேட்டேன்

படித்து என்ன செய்யப் போகிறாய் என்று

நான் காவல்துறை வேலைக்கு செல்வேன் என சொன்னான்

ஏன் அந்தத் துறையை விரும்புகிறாய் என கேட்டேன்

மாதக் கடைசியில் மாமுல் பெறலாம் என்கிறார்


இன்னொருவரிடம் கேட்டேன் அவன் வக்கீல் ஆகலாம் என்றால் ஏன் அந்த துறை உனக்கு பிடித்து இருக்கிறது என்றேன் அவன் சொன்னான் எந்த கேஸ் வந்தாலும் காசு பார்க்கலாம் என்றான்


அரசு வேலை கேட்டு போராடினால் ஏழை பெண்ணொருத்தி

கருணையின் அடிப்படையில்

சத்துணவு வேலை கிடைக்கப்பெற்றாள்


அந்த அரசு வேலையில் சேர்வதற்கு முன்பாக

அவள் மட்டும் இல்லை எல்லோரும் அவளைப் போலத்தான் சொன்னார்கள்

ஆம் அவள் என்னவென்று சொன்னாள் என்றால்

வேலை மட்டும் இருந்தால் போதும் சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை எனக்கு ஏதேனும் அரசு வேலை வேண்டுமென்று தான் அந்தப் போராட்டத்தில் சொன்னால்


ஆனால் வேலை வாங்கிய மூன்றே மாதத்தில் போதாத சம்பளத்தை வைத்து என்ன செய்வது என உள்ளிருப்பு போராட்டம் நடத்தினால்

வெளியிருப்பு போராட்டம் நடத்தினால் சாலை மறியல் செய்தால்


அந்த ஒவ்வொரு போராட்டத்திற்கும் அரசாங்கம் ஒவ்வொரு ஊதியம் ஏற்றுக் கொண்டே போனது அரசாங்கம் ஊதியம் ஏற்ற ஏற்ற அவர்களும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை போராடத் தொடங்குகிறார்கள்




இப்படித்தான்

ஒரு கலெக்டருக்கு ஊதியம் குறைவாக இருப்பதாக அவர் எண்ணுகிறார்

ஒரு மந்திரிக்கு தான் பெரும் ஊதியம் குறைவாக இருப்பதாக எண்ணுகிறார்

ஒரு வட்டாட்சியர் ஊதியம் குறைவாக இருப்பதாக எண்ணுகிறார் ஒரு கிராம நிர்வாக அலுவலர் ஊதியம் குறைவாக இருப்பதாக எண்ணுகிறார் அதனால் அவர்கள் ஊழலை செய்கிறார்கள்


இதுவரைக்கும் நம் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் எத்தனையோ மக்கள் எந்தெந்த கட்சிக்காரர்கள் எந்தெந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் ஊழல் பெறுகிறார்கள் ஊழல் செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் அப்போது தாங்களும் இப்படி செய்வதற்காக


ஒரு நியாய விலை கடையில் உணவுக்காக பெறப்பட்ட அரிசியை ஹிந்தி காரனுக்கு விற்கிறோம் அதுவும் நாம் செய்யும் மிகப்பெரிய ஊழல் தானே

அதே நியாய விலை கடையில் கிடைக்கும் பாமாயில் பெரும்பாலான பேக்கரிகளில் போண்டா பஜ்ஜிக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் ஊழல் தானே


ஊழல் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள் அல்லது லஞ்சம் தான் யார் கொடுக்காமல் இருக்கிறார்கள் ஒரு இடத்தில் லஞ்சம் கொடுப்பவர்கள் தான் இன்னொரு இடத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள்


அரசியல் சாக்கடையில்

ஊழல் கொசுக்களை

கடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்

ஆனால் அதை ஒழிக்க முடியுமா


மக்களின் மனசு ஒரு ஓட்டை வாலி போல

அதை ஒருவராலும் நிரப்ப முடியாது

இன்னைக்கு காசு என்பதை காட்டிலும் ஓசு என்பதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்


நீங்கள் கழித்த சிறுநீர் தான் பக்கத்து வீட்டு வாசல் வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது

இன்னொருவர் கழித்தது உங்கள் வீட்டு வாசல் வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது


ஏமாற்றுபவன் தான் அறிவாளி என்று உலகம் ஏற்றுக்கொண்ட தத்துவத்தில்

யாரையாவது ஒருவரை ஏமாற்றி பிழைத்து விடலாம் என்ற எண்ணமும் இங்கே கொசுக்களாக ஒவ்வொருவரும் இதயத்திலும் பறந்து கொண்டுதான் இருக்கிறது


தலைவர் ஒருவர் அல்ல ஒவ்வொரு மக்களும் தலைவனாக வாழ்ந்தால் தான் அந்த ஊழலை ஒழிக்க முடியும்

இது சாத்தியமாகுமா