பிடிக்காத வாழ்க்கை
பிடிக்காத வாழ்க்கையும் வாழ்வியல் தத்துவம்
![]() |
| கற்பனை புகைபடம் |
சிலர் எது வாழ்க்கை என்று தெரியவில்லை என்கிறார்கள் இன்னும் சிலர் உணவுக்காக உழைக்கிறேன் உழைத்ததற்காக உண்ணுகிறேன் இதுதான் வாழ்க்கையா இவ்வளவுதான் வாழ்க்கையா என்கிறார்கள்
பிறந்துவிட்டேன் என்பதற்காக வாழ்கிறேன் வாழ்ந்து விட்டேன் என்பதற்காக இருக்கப் போகிறோம் இவ்வளவுதான் வாழ்க்கையா இதுதான் வாழ்க்கையா என்றும் வாழ்வை பற்றி சொல்லுகிறார்கள்
பிறப்பு
மேலும் படிக்க மது ஒழிக்கும் நடிவடிக்கை?
எப்படியோ பிறந்து விட்டோம் இது எல்லார் வாழ்விலும் நடந்து விடுகிறது திறந்து விட்டோம் என்பதற்காக தான் வாழவும் தொடங்குகிறோம் வாழ்க்கை இப்படித்தான் தொடங்குகிறது ஆனாலும் வாழ்க்கை என்பது எதற்காக வாழ்கிறோம் என்பதை பொறுத்ததாகவே இருக்கிறது அதைக் குறித்துதாகவே எல்லாரும் பேசுகிறார்கள்
ஏனோ பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கையின் விதிமுறைகளை வகுத்து வாழ்பவர்கள் தான் வாழ்கிறார்கள் என்று பொருளாகிறது
வாழ்வின் பொருள் என்ன
எல்லாரும் எப்படியோ பிறந்து வட்ட போதிலும் பசியின் கொடுமை தாங்காமல் உணவிற்காக உழைக்கத் தொடங்கி உழைத்ததற்காக உண்ண பழகி இதுவே வாழ்க்கை என்று ஆகிவிட்டது பலருக்கு வாழ்வின் பொருள் என்ன என்பதை சிலரும் அறியவில்லை அறிவதற்கான நேரமும் இல்லை அவர்களின் வாழ்க்கையின் கஷ்டங்களும் கவலைகளும் நிறைந்ததாகவே இருக்கிறது
ஆனால் எல்லாரும் ஏதோ ஒரு வாழ்வின் பொருளிற்காக வாழ்வின் பொருள் என்ன வாழ்வின் அர்த்தம் என்ன நீங்கள் எதற்காக இந்த வாழ்க்கை வாழ்ந்தீர்கள் என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சிலர்தான் வாழ்கிறார்கள் அதற்கு முக்கியமாக பண தேவைகள் பூர்த்தியாய் இருந்தவர்கள் தான் அதை நிறைவேற்றுகிறார்கள் எல்லாருடைய வாழ்விலும் அது நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது
பிடிக்காத வாழ்க்கை தங்கதமிழன்கவிதைகள்அம்மா அப்பா கண்முன்னால்
என்னுடைய கற்பனைகள் ஒரு கதை வடித்து இரந்தேன் ஒருவன் தற்கொலை செய்யப் போகிறான் அவனை தடுத்து ஏன் தற்கொலை செய்கிறாய் என கேட்கிறார் அவன் வாழ்க்கை பிடிக்கவில்லை என சொல்லுகிறான் இதற்காக சாகிறாய் என்கிறார் ஆம் பிடிக்கவில்லை வாழ்க்கை அதற்காகத்தானே சாகுறேன்
இது சரிதானே என்றான் அதற்கு அவன் சொன்னான் வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்பதற்காக சாக வேண்டுமென்றால் இந்த உலகத்தில் ஒருவர் கூட வாழ முடியாது அவன் ஏறெடுத்துப் பார்த்தான் என்ன சொல்கிறீர்கள் ஆம் உண்மையைத்தான் சொல்லுகிறேன் வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதற்காக ஒருவர் சாக வேண்டும் என்றால் இந்த உலகத்தில் ஒருவர் கூட வாழ முடியாது ஏனென்றால் எல்லாருக்கும் பிடிக்காத வாழ்க்கை தான் பிடித்தது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
உங்களுடைய வாழ்க்கையில் விரும்பினதோ எதிர்பார்த்ததோ கிடைக்காமல் போயிருந்தாலோ அது வேதனையை தந்து வந்தாலோ அது வாழவிடுமா செய்தாலோ அதற்காக நீங்கள் மரணத்தை தேர்ந்தெடுக்காதீர்கள் உங்கள் வாழ்வின் பொருள் என்ன என்பதற்காக நீங்கள் வாழ வேண்டும் எது இருந்தாலும் இல்லையென்றாலும் நீங்கள் வாழ வேண்டும் ஏனெனில் வாழ்வின் பொருள் அதுவாக கூட இருக்கலாம்
நான் இந்த கட்டுரையின் முடிவுரையில் நண்பர்களே உங்களுடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் யார் உங்களை விலகிச் சென்றாலும் எவ்வளவு தோல்விகள் வந்தாலும் நீங்கள் வாழுங்கள் பிடிக்காத வாழ்க்கை என்றாலும் பிடித்து வாழுங்கள் வாழ்வின் பொருள் அதுவாக கூட இருக்கலாம் நீங்கள் பிடிக்காத ஒருவருக்காக வாழ வேண்டிய வரம் வாங்கி வந்தவர் அவர் கூட இருக்கலாம் அதனால் வாழுங்கள்

0 Comments