கோலியின் ஆடம்பர வாழ்க்கை அடிக்கடி ஊடகங்களில் பேசப்படுகிறது. ஃபேஷன் உலகில் புது டிரெண்டுகளை பின்பற்றும் கோலி, தனது தலைமுடியை ஸ்டைல் செய்ய லட்சங்களை செலவிடுகிறார். ஆனால் தோனி இந்த முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்.
தோனியின் வாழ்க்கை முறை எப்போதும் சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் இருக்கும். எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல், தனது ஊரில் உள்ள ஒரு சாதாரண முடிதிருத்துபவரையே நம்பியிருப்பது அவரது எளிமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பண வசதி இருந்தும், எளிமையான வாழ்க்கையை வாழ அவர் காட்டும் மனது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.