Header Ads Widget

Responsive Advertisement

காய்ச்சல் வந்ததும் மகள் எனக்கு தாயானாள்

 காய்ச்சல் வந்ததும் மகள் எனக்கு தாயானாள்

காய்ச்சலின் இரவில் 

தங்கதமிழன் கவிதைகள் 


நேற்று இரவு கடுமையான காய்ச்சலால் தவித்த எனக்கு, மருந்தை விட மகளின் அன்பே பெரிய ஆறுதலாக மாறியது. அந்த ஒரு இரவில் மகள் தாயாகவும், நான் குழந்தையாகவும் மாறிய தருணத்தை இந்த கவிதை பேசுகிறது.

காய்ச்சல் வந்ததும் மகள் எனக்கு தாயானாள்
நேற்று இரவு
கடுமையான காய்ச்சல்…
உடம்பு முழுவதும்
நெருப்பை சுமந்தது போல இருந்தது…
தூக்கம் மட்டும்
எங்கேயோ தூரத்தில் போய்
ஒளிந்து கொண்டது…
மருத்துவரை பார்க்க
கையில் பணமில்லை…
அதனால்
இலவச மருத்துவமனைக்கே சென்றேன்…
அங்கே இருந்த மருத்துவர்
எந்த கல்லூரியில்
மருத்துவம் படித்தார் என்று தெரியாது…
ஆனால்
அவரின் அன்பு மட்டும்
எல்லா பட்டங்களையும் விட பெரியது…
தலையை மெதுவாக சீவி வைத்து…
லிப்ஸ்டிக் பூசிய சிரிப்புடன்…
என் காய்ச்சலை துரத்தி விட்டு
தூக்கத்தை திரும்ப வரவழைத்தார்…
அவர் மருத்துவர் இல்லை…
என் மகள்…

“அப்பா…” என்று

நெற்றியில் கை வைத்த அந்த நொடி…
காய்ச்சல் கூட
பயந்து நடுங்கியது…
காய்ச்சல் வந்ததும்
மகள் எனக்கு தாயானாள்…
நான்
மகளுக்கு மகனானேன்…
அந்த அன்பின் முன்
மருந்துகள் தோற்றுப் போயின…
காய்ச்சலுக்கே
கண்ணீர் வந்து ஓடியது…
— தங்கத்தமிழன்

Post a Comment

0 Comments